Thursday, November 25, 2010

Kamal haasan's வெண்பா




கிரஹணாதி கிரஹணங்ட்கு அப்பாலுமே ஒரு அசஹாய சக்தி உண்டாம்.
ஆளுக்கு ஆள் ஒரு மொழிபுறை கிரிக்கியும் யாருக்கும் விளங்கததாம்.
அதை பயற்ந்து அதை உணர்ந்து அதை துதிப்பதுவன்றி பெரிதேதும் வழி இல்லையாம்.
நாம் செய்த வினைஎல்லாம் முன் செய்ததென்பது விதி ஒன்று செயவிததாம்.
அதை வெல்ல முயல்வோரை சதி கூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்.
குருடாக, செவிடாக, மலடாக, முடமாக, கரு சேர்க்கும் திருமூலமாம்.
குஷ்ட குஹ்யம் புற்று சூலை மூலம் என்ற க்ரூரங்கள் அதன் சித்தமாம்.
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புது ஜென்மம் தந்தருளுமாம்.
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதேதும் வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம்.
ஏழைக்கு வரும் துயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்.
நேர்கின்ற நேர்வேல்லாம் நேர்விக்கும் நாயகம் போர் கூட அதனின் செயலாம்.
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னற்கு தரணிதந்தது காக்குமாம்.
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர்தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்.
அசுரரை பிளந்த போல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்தும்,
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்,
பிள்ளையின் கறியுண்டு நம்பினாற்கு அருளிடும் பரிவான பரப்ரம்மமே!!!
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு சக்தியை
மற்றவர் வயி பயம் கொண்டு நீ போற்றிடு, அற்றதை உண்டென்று கொள்!
ஆகம குளமூழ்கி, மும்மலம் கழி, அறிவை ஆத்திக சலவையும் செய்!
கொட்டடித்து போற்று, மணியடித்து போற்று, கற்பூர அறத்தியை!
தையடா ஊசியிர் தந்ததை தைத்தப்பின் தக்கதை தய்யாதிறு
உய்திடும் மெய் வழி உதாசீநிதப்பின் நெய்வதே நன்றனின் நை!


உலகநாயகன்

கமலஹாசன்





Wednesday, November 24, 2010

யார் அந்த பரப்ரம்மம்?


வேகமாக சுழலும் உலகில் சின்னஞ்சிறிய உலகங்கள் படைத்தது அதில் சுகதுக்கங்களை ஆண்டுகொண்டு அதிலேயே மாண்டுகொண்டிருக்கும் கோடானகோடி சிற்றரசர்களில் சிலர் மட்டுமே உலகை ஆள பிறக்கிறார்கள். கண்களில் கனவையும், நெஞ்சினில் தாகமும் கொண்டு ஒவ்வொரு நாளும் தன் நம்பிக்கை வளர்த்து லட்சியம் வெல்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் செல் போனை விட கை கொடுக்கும் விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. கண்களில் புலப்படாத சக்திக்கு மதிப்பும், மவுசும் அதிகமாம். நம் உலகை படைத்த சக்தியும் இதில் ஒன்று. கடவுள் என்ற ஒரு விஷயம் எல்லோராலும் பேசப்படுகிறது.

தினம் தோரும் துதித்து அருள் பெறுவதாக ஒரு சாரார், இல்லை இல்லை என்று பஹிரங்கப்படுத்தும் மற்றொரு சாரார். இல்லை இல்லை என்று சொல்லிச்சொல்லி கடவுளை மறக்காமல் பேசிகிறார். ஆமாம் ஆமாம் என்று பேசி துதிக்கவும் மறக்கிறார்...

பலவகை கடவுள்கள் நம்மை கவர்ந்து அவரவர்களின் வழியில் நம்மை ஈர்த்து வாழ்கை பாதையை அமைக்கிறார்கள். நம் வாழ்கை நெறிகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் எல்லாமே ஒரே கால தேச வர்த்தமானத்தை சார்ந்தே இருந்தாலும் வெவ்வேறாக மாறுபட்டே காணப்படுகிறது.

கடவுள் மனிதனை படைதான? அல்ல மனிதன் கடவுளை படைத்தானா??

கடவுள் படைத்த உலகில் பாரபட்சம் நிலவக்கூடாது. உண்மை அது அல்ல என்றாலும், மனிதனால் இவ்வளவு அற்புதங்களை இயற்கையில் இயக்க முடியாது. இயற்கை தான் கடவுளோ?
அவரவர் சொவ்ஹர்யங்களுக்கு ஏதுவாக மனிதன் கடவுளைபடைத்திருக்க்கக்கூடும். மாடு மேய்த்த கண்ணனும் ஆடு மேய்த்த ஏசுவும் பலரின் இஷ்ட தெய்வங்கள்.


மனித உருவில் கடவுளை ஏன் உணர வேண்டும்? இந்த சித்தாந்தம் சொல்லும்உட்கருத்து என் வரையில் ஒன்று தான்:

"மனிதனே கடவுள்"

நாம் அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்வதை விட யாசகம் கேட்பதே அதிகம். உண்மையாய் இறையை போற்றி, அந்த எல்லாம் வல்லனுக்கு நன்றி கூறும்ஜீவாத்மாக்கள் துர்லபமே.


" மனிதனுக்கு கடவுளின் தேவை என்ன?"

துக்கங்களை பகிர்ந்துகொள்ள, கொஞ்சி விளையாட, உரிமையுடன்கோபித்துக்கொள்ள, துன்பம் வரும் வேளையில் நம்மையேதிடப்படுத்திக்கொள்ள தேவையான ஒரு "துணை"

தாயையும், நண்பனையும், மனைவியையும், குழந்தையையும் நாம் தெய்வத்தை ஒத்த ஸ்தானத்தில் வைத்ததின் அர்த்தம் இது தானோ??



யார் அந்த பரப்ரம்மம்?
ஆண்ட சராசரம் அந்த பஞ்ச பூதங்களின் அமைப்பு. நம்மை சுற்றி வியாபித்திருப்பது சக்தியின் உருவம். அதே சக்தி எல்லா மனதிற்குள்ளும் பற்பல கற்பனைகளாக ஊறிக்கிடக்கிறது. அன்பின் அடையாளமாக உலகில் பல பிரம்மாண்டமான மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

திருமறையில் ஒரு பிரபல குறள்...

"அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு"

அன்பினால் ஒரு உயிர் பலர்க்கு சொந்தமாகிறது... சற்றே ஆழமாக பார்த்தல், அன்பு தான் உலகை ஆளும் சக்தி.

அன்பே கடவுள்; அன்பே உலகை படைத்த சக்தி;

அன்பே மனிதன் தேடும் கடவுள்!
அன்பே மனிதனை மனிதனாக்கியது.

அன்பே தான் அந்த பரப்ரம்மம்!!!